About Swan Brand

swanbrand_electricalpipes_maduraiஎமது நிறுவனத்தைப் பற்றி.. 

வியாபாரத்தின் வளமை...புதுமையை செயல்படுத்துவதிலும், தரத்தை மேம்படுத்துவதில் தான் உள்ளது! அதற்கான மாற்றத்தை எப்போதும் ஏற்றுக் கொள்வதில் தயக்கமே தேவை இல்லைதான்!


SWAN BRAND
 எனும் பெயரில் 1970களிலிருந்து இன்றளவும் மிகப்பெரிய சவால்களுடன், போட்டிகளையும் கடந்து, எங்கள் இயல்பான தன்மையுடன் வியாபாரயுக்தியுடன் மின்சாதன பொருட்களூம், பிளம்பிங் உதிரிபாகங்களையும் மிகுந்த கவனத்துடன், உயரிய தரத்துடன், சிறந்த மூலப்பொருட்கள் கொண்டு தொழில் நேர்த்தியுடன் தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். தமிழ்நாட்டில் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் நாங்களும் ஒரு அங்கமாக திகழ்கிறோம்.

அசாதாரணமாக ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது எமது நிறுவனம். சாதாரண கிளாம்ப் வகைகளிலிருந்து மக்களின் உபயோகத்திற்கான மின்சாதன பொருட்களை தயாரித்து நல்ல முறையில் நற்பெயர் பெற்றதற்கு எங்கள் நாற்பத்தி எட்டு (48) நீடித்த ஆண்டுகளில் நாங்கள் செய்து வரும் வணிகத்தரமே சான்றாகும்.

இன்றளவும் சிறப்புடன், இனிவரும் காலங்களுக்கு ஏற்றவாறு புதிய முனைப்புடன் செயல்பட தீர்மானித்து எமது நிறுவனம் ஒரு செயல் பரிமாணத்துடன் மேலும் துடிப்புடன் செயல்பட ஆர்வம் கொண்டுள்ளோம்...உள்ளார்ந்த உணர்வுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திட உறுதி கொண்டுள்ளோம்.

"வியாபாரம் என்பது இலாபத்திற்காக மட்டுமல்ல...
மக்களின் தேவைக்கும், சேவைக்கும் தான்..."